சிங்கப்பூர் சவாரி சென்று பிரதமரிடம் மாட்டிக் கொண்ட நிதி அமைச்சு ஊழியர்கள்
அண்மையில் நியூசிலாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் விமானத்தில் விசேட நபர்களை சந்தித்துள்ளார். அவர்கள் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ஏறியுள்ளனர்.சுமார் 100 பேர் கொண்ட இலங்கையின் அரச ஊழியர்களே இவ்வாறு விமானத்தில் ஏறியுள்ளனர். அவர்கள் சிங்கப்பூருக்கு சவாரி சென்றுள்ளனர். இந்த நபர்களை கண்ட பிரதமர் பெரிதாக அலட்டிக் கொள்ளாது இலங்கை வந்ததும் சவாரி குறித்து ஆராய்ந்துள்ளார்.
நிதி அமைச்சின் 100 உத்தியோகத்தர்கள் சிங்கப்பூருக்கு சவாரி செல்வதாக ஜனாதிபதி அல்லது பிரதமருக்கு அறிவித்திருக்கவில்லை. இதற்கு திரைசேறி செயலாளர் எஸ்.சமரதுங்க அனுமதி அளித்துள்ளார்.
அரச ஊழியர்கள் வௌிநாட்டு பயணத்திற்கு அனுப்புவது அரசாங்கத்திற்கு ஏதேனும் நன்மை இருந்தால் மாத்திரமே. ஆனால் இந்த சவாரியில் அவ்வாறு எதுவும் கிடைத்ததாக தகவல் இல்லை. எனினும் இந்த சவாரிக்கு மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது.
இந்த சவாரிக்கு அனுமதி அளித்தது எவ்வாறு என்பது பற்றி விசாரணை நடத்தப்படுவதுடன் திரைசேறி செயலாளருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply