திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 970 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, சில்லரை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவை உள்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தி வருகின்றனர். காணிக்கை தங்கத்தை சேகரித்து, மும்பைக்கு எடுத்துச்சென்று, அதனை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக தயாரித்து, அரசு வங்கிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்து வருகிறது.

 

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் 970 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அப்போது தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், “திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏற்கனவே தங்கத்தை முதலீடு செய்துள்ளது. தங்கத்தை முதலீடு செய்த காலம் முதிர்வடைந்த நிலையில், அதனை மீண்டும் பாரத ஸ்டேட் வங்கியிலேயே 970 கிலோ எடையிலான தங்கத்தை குறுகிய கால முதலீடாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சான்றை வங்கி அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரியிடம் வழங்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply