அண்ணனை கொல்ல வடகொரிய அதிபர் உத்தரவு பிறப்பித்தார்: தென்கொரியா

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம் (42). இவர் மலேசியாவில் கோலாலம் பூர் விமான நிலையத்தில் வி எக்ஸ் என்ற ரசாயன பொருள் வீசி படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக இந்தோனேசியா, வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனது அண்ணனை கொல்ல வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் உத்தரவிட்டார் என தென்கொரிய உளவு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய எம்.பி.க்கள் கூறும்போது, வடகொரிய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் கிம் ஜாங்-நம்’ஐ கொலை செய்ய 2 பெண்களை பணியில் அமர்த்தியிருந்தனர் என கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் தனது அண்ணனை கொலை செய்ய வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் உத்தரவிட்டார் என தென் கொரிய எம்.பி. கிம் பயுங்-கீ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் 2 குழுக்கள் அவரை கொலை செய்யவும், ஒரு குழு அவர்களுக்கு உதவவும் நியமிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இதை வட கொரியா அரசு முற்றிலும் மறுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply