இத்தாலியில் எரிமலை வெடித்து நெருப்பு குழம்பு வெளியேற்றம்
இத்தாலி நாட்டில் கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலையானது நேற்று முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையின் முகப்பில் இருந்து லாவா எனும் நெருப்பு குழம்பு வெளிப்பட்டு வழிந்து வருகிறது. இந்த நெருப்பு குழம்பு வானத்தை நோக்கி செல்வது போன்று இருப்பதாக காடானியா நகரத்தில் வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எரிமலை சாம்பல் பறப்பது அப்பகுதியில் விமானப் போக்குவரத்தை பாதிக்கும் என்றாலும், காடானியா விமான நிலையம் வழக்கம் போல இயங்கியது.
எரிமலை வெடிப்பு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் இதனால் மலைச் சரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply