புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் பலன் தந்ததா?
இலங்கையில் போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு மேற்குலக நாடுகளில் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து இலங்கை இனப்பிரச்சினை குறித்து அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் மாநில சட்டப்பேரவையில் 1979ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டவரும், தற்போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிப்பவருமான தில்லையம்பலம் ஸ்ரீதரன் கருத்துவெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்தை மேற்குலக அரசாங்கங்கள் தெரிவித்திருக்கவில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர்ப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோராத நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கா அல்லது விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றுவதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தில்லையம்பலம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply