முல்லைத்தீவுக்கு ஒரு லொறி மருந்துகள் சென்றடைந்தன

வவுனியாவில் தேங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்குரிய மருந்துகளில் ஒரு லொறிலோட் மருந்துகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அன்ரிபயட்டிக், பனடோல் உள்ளிட்ட முக்கிய மருந்துகள் மாத்திரமே இவ்வாறு வந்து கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளுக்கோஸ், திரிபோஷா என்பவற்றுடன் 3 லொறி லோட் அடங்கிய வேறு முக்கிய மருந்து வகைகள் இன்னும் வவுனியாவில் தேங்கியிருப்பதாகவும், இவற்றை ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகப் பெறுவதற்குரிய பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply