வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அனுமதியில்லை : செயிட் அல் ஹூசைனுக்கு ஜனாதிபதி பதில்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு தான் இடமளிக்க போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக தான் தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வலியுறுத்தியதாகவும், தான் ஒருபோதும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கு தயாராக இல்லையென அவருக்கு 24 மணித்தியாலங்களுக்குள் பதிலளித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன நேற்று இலங்கை மன்றத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply