உலகில் முன்மாதிரி இராணுவம் எமது : ஜனாதிபதி

பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திடசங்கற்பம் மிக்க சேவைக்காக அவர்களுக்கு தேசத்தின் கெளரவம் உரித்தாகட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு சென்று படை வீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது இராணுவ வீரர்கள் உலகின் எந்தவொரு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்கள். இன, மத, ஜாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் அச்சமின்றியும் சந்தேகமின்றியும் சுதந்திரமாக வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் இவர்கள் பாடுபடுகின்றன்னர் எனவும் ஜனாதிபதி கூறினார்.

உலகில் மிகவும் கொடிய பயங்கரவாதப் புலிகளை இன்று அழித்து ஒழிப்பதற்கு எமது இராணுவ வீரர்களால் முடிந்துள்ளது.

இராணுவ வீரர்கள் வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சரியான தலைமைத்துவத்துக்கும் பாராட்டுக்கள் உரித்தாகும். அதே போல் இராணுவ வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் அதிகூடிய கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பெற்றுக் கொடுத்தல், அவர்களது குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விசேடமாக கிளிநொச்சியில் இன்று நான் காலடி வைக்க முடிந்தமை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இப்பிரதேசத்திற்கு இன்று நான் விஜயம் செய்வதற்குரிய காரணம் பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து இராணுவ வீரர்களினதும் வரையறையற்ற அர்ப்பணிப்பான சேவையினாலாகும்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்ட ஜனாதிபதிக்கு படை வீரர்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply