ரூ.1375 கோடி மதிப்பிலான அரசு கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிச்சாமி

தமிழகத்தில் பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்க விழா நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.
இதில், சென்னை உள்ளிட்ட இந்த 7 மாவட்டங்களிலும் 26 துறைகளில் ரூ.1375.95 ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ரூ.111.03 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுதவிர தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகன சேவை, மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்டரி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். வணிகவரி, பதிவுத் துறைக் வாகனங்களை வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply