மியான்மர் நாட்டில் துப்பாக்கி சண்டை: 30 பேர் பலி

மியான்மர் நாட்டில் சீன எல்லையை ஒட்டி ஷான் மாகாணம் உள்ளது. போராளிக்குழு ஒன்று ஆயுதம் ஏந்தி அங்கு போராடி வருகிறது. நேற்று பாதுகாப்பு படையினருக்கும், அந்த போராளிக்குழுவுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 5 அப்பாவிகளும், 5 போலீஸ் அதிகாரிகளும், 20 போராளிகளும் பலியானார்கள். பலியான அப்பாவிகளில், ஒரு ஆசிரியரும் அடங்குவார். இத்தகவலை மியான்மர் நாட்டு அரசியல் தலைவர் ஆங்சான் சூகியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply