சர்வதேச மகளிர் தினம் – 2017 மார்ச் 08 முன்னோக்கிச் செல்வோம்
தற்பொழுது உள்ள அரசாங்கத்திலும் உள்ளுராட்சி நிறுவனங்களிலும் உள்ள பெண் பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 25 விகிதம் என சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அது சந்தோஷமான விடயமாகும். அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்வதற்காக எமது சமூகத்தில் பலரினால் முன்வைக்கப்பட்ட தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த வெற்றியை நாம் அடைந்துள்ளோம்.
தற்பொழுது அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டு வருகின்றது. அரச நிறுவனங்கள் மட்டுமின்றி பெண்கள் அமைப்பும் இக்கலந்துரையாடலில் முன்னோடியாக உள்ளனர். நாம் இச் சந்தர்ப்பத்தை எமது பக்கம் கொண்டு வந்து அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு கொள்வதற்காக கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நம்நாட்டின் சர்வஜன வாக்குரிமை பெற்றுக் கொண்டு 80 வருடங்கள் கடந்திருந்தும் இன்னும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5 வீதமே உள்ளது. மாகாணசபையில் 4 வீதம். உள்ளுராட்சி நிறுவனங்களில் 2.7 வீதம், தெட்டத் தெளிவாக தெரியும் சிவில் சமூக அமைப்புகளில் பூச்சியம் என் விகித அடிப்படையிலேயே உள்ளது.
சட்ட ரீதியாக மட்டும் இந்த சீரற்ற அரசியல் கலாச்சாரம் மாற்றமடையாது. வளர்ச்சியற்ற பெண்களுக்கு கிடைக்கப்பெறும் நல்ல சந்தர்ப்பங்கள் இழக்கப்படும் போது அதற்கு நிகரான சந்தர்ப்பம் உருவாக்கப்படும். பாராளுமன்றத்தில் கூட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது சாதாரன விடயமாகும். தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னோக்கிச் செல்லும் பெண்கள் கூட அப்படியே நின்று விடுகின்றார்கள். அத்துடன் வீட்டு வேலைகளை கூட பிரித்துக் கொள்வதற்கு ஆண்கள் விரும்பாததன் காரணமாக வீட்டிலும் கூட பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர் குறைந்த வருமானம் காரணமாக அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை கட்டியெழுப்பும் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காகவே நாம் முயற்சிக்க வேண்டும். இது தொடர்பில் இன்று எழுந்துள்ள ஜனநாயக அரசியல் இடைவெளியை நிரப்புவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று நாம் இந்த சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் பானம சிங்கள தாய்மார்களும், கிளிநொச்சி தமிழ் தாய்மார்களும் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலத்தினை பெற்றுக் கொடுக்குமாறு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 14 வருடங்கள் கடந்திருந்தும் தொழிற்சங்க உரிமை அற்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் தமது உரிமையை கோரியுள்ளனர்.
பேருந்துகளில் 90 வீதமான பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். குறைந்த வயதுடைய பெண்கள் பலவந்தமாக திருமணத்திற்குட்படுத்தப்படுகின்றனர். மில்லியன் அளவிலான பெண்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்காக சென்று மிகவும் துன்பத்திற்கு மத்தியில் தமது வாழ்வை கொண்டு செல்கின்றனர். தோட்டப் புறங்களில் உள்ள பெண்கள் இன்னும் அப்படியே இருக்கின்றனர். நூற்றுக்கு 60 வீத – 80 வீத திருமணமான பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். வருடத்திற்கு 2000 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் முறைபாடு மூலம் வழக்கு தொடரப்பட்டிருந்தாலும் குற்றவாளிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்தே காணப்படுகின்றன.
ஆசிரியர் சேவையில் அதிகூடிய அளவில் பெண்களாக இருந்தாலும் உயர் அதிகாரிகளாக பணியாற்ற வாய்பபு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உரிமைக்காகவே போராடுவதோடு சமூக அரசியல் பொருளாதாரத்திற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்ட குறிப்பிடப்படாத துறையில் எமக்கான இடத்தை எமக்கான உரிமையை எமக்கே கிடைக்க வேண்டும். அந்த உரிமை தானாகவே கிடைக்காது. நாம் கதவை தட்டினால் மட்டுமே கிடைக்கும்.
பெண்களின் உரிமைப்பற்றி சிந்தியுங்கள். எழுதுங்கள். ஒன்றிணையுங்கள். தலையிடுங்கள். குரல் கொடுங்கள்.
இன்று போல் ஒரு நாளில் எமது பெண்களின் உரிமைக்காக இந்நாட்டு பெண்களுக்கு உள்ள சமஉரிமை பற்றி பேசுவோம். மாற்றம் ஏற்படுவதும் எங்களால் தான்.
வாழ்க !
ஜனநாயக மக்கள் அலகு !
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply