இலங்கை கடற்படையினர் 10 நிமிடம் சரமாரியாக சுட்டனர் சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர் பேட்டி

இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவுடன் மீன்பிடிக்கச் சென்ற சக மீனவர் ராஜா துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கண்ணீர்மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். இரவு சுமார் 9 மணி அளவில் அங்கு 4-க்கும் மேற்பட்ட அதிவேக ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடியே எங்கள் படகை நோக்கி வந்தனர்.

 

 

பிரிட்ஜோ தான் இதனை முதலில் பார்த்து, ‘இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக மறைந்து கொள்ளுங்கள்’ என்று எங்களிடம் தெரிவித்தான்.

 

 

10 நிமிடம் சுட்டனர்

 

 

சுமார் 10 நிமிடம் தொடர்ந்து எங்கள் படகு மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். அவர்கள் சென்றதும் நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது பிரிட்ஜோவின் கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

 

 

உயிருக்கு போராடிய அவன் எங்களிடம் பேச முயன்றான். ஆனால் அவனால் பேச முடியவில்லை. இதேபோல மற்றொரு மீனவரான சரோனுக்கு கால் மற்றும் கைகளில் குண்டு காயங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எங்களுக்கு பதற்றமாக இருந்ததால் உடனடியாக அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று வேகமாக கரைக்கு திரும்பினோம். கரையை நெருங்கும்வரை பிரிட்ஜோவுக்கு உயிர் இருந்தது.

 

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply