நீடித்து வரும் யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் அவல வாழ்க்கையில் இந்திய வெளியுறவுச் செயலர் கவலை
இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நீடித்து வருடம் யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பாரிய அவலங்களுக்குள்ளாகியுள்ளனர். இங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்பவும் ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான அனைத்தையும் செய்ய இந்தியா தயாராகவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சீவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.இலங்கை நிலை தொடர்பாக இந்திய ஊடகமொன்றுக்குக் கருத்துள்ள தெரிவித்துள்ள அவர், நீடித்து வரும் யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் முகங்கொண்டுள்ள அவல நிலையை இந்தியா அவதானித்து வருகிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலரி கிளின்டனைச் சந்தித்தபோதும் இது தொடர்பில் நான் எனது கருத்துகளைத் தெரிவித்திருந்தேன்.
இலங்கையின் திருகோணமலையில் இந்தியாவின் சார்பில் தற்போது வைத்தியசாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு நாம் சேவையாற்றி வருகிறோம். அதேபோன்று இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply