என்னிடமிருந்து முஸ்லிம்களை நிரந்தரமாக பிரிப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் சதி : மஹிந்த
என்னிடமிருந்து முஸ்லிம்களை நிரந்தரமாக பிரிப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் சதி செய்கின்றன என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த சூழ்ச்சிகளில் சிக்கி பலியாக வேண்டாம் எனவும் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் சிலருக்குமிடையேயான சந்திப்பொன்று புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எனது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களுக்கான சகல
உதவிகளும் வழங்கப்பட்டன. இதனை எவராலும் மறுக்க முடியாது.
நான் வடக்கு கிழக்கில் பல பள்ளிகளை புனரமைத்திருக்கிறேன். அத்துடன் நாட்டில் புதிதாக 4 பள்ளிகளை
நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறேன்.
இவ்வாறானதெரு நிலையில் இன்று முஸ்லிம்களை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரப்பதற்கு வெ ளிநாட்டு சக்திகள் சதித்திட்டங்களை தீட்டுகின்றன. அதற்காக பெருமளவில் நிதி ஒதுக்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த சூழ்ச்சிக்கு யாரும் பலியாகிவிடக்கூடாது. அவர்கள் இந்த
சூழ்ச்சியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply