கழிவகற்றலை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்
கொழும்பு மற்றும் சன நெருக்கடி மிக்க பிரதேசங்களில் கழிவகற்றலை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இணைந்து முறையொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பொறுப்புள்ள சம்பந்தப்பட்ட பிரதான நிறுவனங்களிடையே சரியான தொடர்பு முறை ஒன்று இல்லாமை கழிவு முகாமைத்துவத்தின் தோல்விக்கான பிரதான காரணம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக தம்மீதுள்ள பொறுப்புக்களை சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மற்றும் சன நெருக்கடி மிக்க பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் தொடர்பாக இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஒழுங்கற்ற முறையில் குப்பைகளை வீசுவதற்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வது தொடர்பில், சுற்றாடல் பொலிஸ் பிரிவுக்கு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply