இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை
சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர்.இதை எதிர்க்கும் நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்தொழிப்பது எப்படி? என்பது தொடர்பாக புதிய செயல் திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானுக்கு கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
அந்த அறிக்கையை சமர்ப்பிக்க 30 நாள் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் 22-23 தேதிகளில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்காவின் நேசத்துக்குரிய நாடுகளாக இருந்துவரும் 68 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துற மந்திரிகள் கலந்து கொண்டு விவாதித்து, முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அல்லது வெளியுறவுத்துறை செயலாளர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply