காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்; மூவர் காயம்; இருவர் கைது
காத்தான்குடியில் நேற்று (10.3.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் (10.3.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெறவிருந்த நிலையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் வாள்வெட்டு மற்றும் கல் வீச்சு சம்பவங்களில் இரண்டு குழுக்களில் இருந்தும் மூவர் காயமடைந்துள்ளதாகவும், அதில் வாள்வெட்டுக்கு இழக்கான ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்வீச்சினால் காயமடைந்த இருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் தெரிய வருகின்றது.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனர்.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற் கொண்டதுடன், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply