என்னை நீக்கியதன் பின்னால் சம்பந்தன் இருக்கிறார் : தினேஷ்
தனக்கு ஒருவார கால பாராளுமன்ற தடை விதிக்கப்பட்ட நடவடிக்கை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.இந்த தடையின் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காணப்படுகின்றார். பாராளுமன்றத்திலுள்ள 52 உறுப்பினரைப் புறக்கணித்து, 16 உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது கவலையளிக்கின்றது.
பாராளுமன்றத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுவதற்கு முன்னர், கட்சித் தலைவர்களை சபாநாயகர் அழைத்து கலந்துரையாடுவார். இருப்பினும், எனக்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்ட போதோ இந்த பாராளுமன்ற நடைமுறை சபாநாயகரினால் நிராகரிக்கப்பட்டது.
பாராளுமன்றம் ஆபத்தான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. பாராளுமன்றத்துக்குள் பொலிஸாரை அழைப்பது என்பது பயங்கரமான ஒன்று. இவ்வாறு நடைபெற முன்னர் தான் கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றது. ஏதும் நடந்ததற்குப் பிறகு அழுவதை விடவும், வரமுன்னர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றே நாம் கூறுகின்றோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply