அமெரிக்காவில் கிரெடிட் கார்டு மோசடி: இந்தியர் தலைமையிலான 30 பேர் கும்பல் பிடிபட்டது

அமெரிக்காவில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட இந்தியர் தலைமையிலான 30 பேர் கும்பல் பிடிபட்டது.நியூயார்க் நகர பகுதியைச் சேர்ந்தவர் முகமது ராணா (40). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். முகமது ராணாவுக்கு பக்க பலமாக இந்திர ஜித் என்ற இந்தியர் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஏப்ரல் முதல் நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த பலர் கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக நியூயார்க் சிறப்பு குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரித்து வந்தனர். சுமார் 2 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, முகமது ராணா தலைமையிலான 30 பேர் கும்பலை நியூயார்க் போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியர்கள்.

இதுதொடர்பாக நியூயார்க் போலீஸார் கூறியதாவது:

முகமது ராணா குழுவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வணிக வளாகங்கள், நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்களை நவீன கருவிகள் மூலம் திருடி ராணாவிடம் அளித்துள்ளனர். அதன்மூலம் போலி கிரெடிட் கார்டுகளை ராணா தயாரித்துள்ளார்.

அந்த போலி கார்டுகள் மூலம் ராணா குழுவினர் பல்வேறு கடைகளில் விலைமதிப்பு மிக்க மின்னணு சாதனங்களை வாங்கி, பின்னர் அவற்றை நல்ல விலைக்கு விற்றுள்ளனர். அந்த வகையில் இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமார் ரூ.24 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. ஆயிரக்கணக் கானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

மோசடி கும்பலிடம் இருந்து ரூ.26 லட்சம் ரொக்க பணம், தங்கக் கட்டிகள், ஏராளமான போலி கிரெடிட் கார்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

மோசடி வழக்கில் முகமது ராணா, இந்திரஜித் ஆகியோர் உட்பட 20 பேர் பிரதான எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

ராணா கும்பலுக்காக போலி கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட் கள் வாங்கி கொடுத்த இதர 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட் டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு நியூயார்க் போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply