இந்தோனேசியாவில் மத அவமதிப்பு செய்த 2 புத்த மதத்தினருக்கு பிரம்பு அடி
முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் ‘ஷரிபர்’ எனப்படும் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. மது குடித்தல், சூதாட்டம், கற்பழிப்பு, ஓரின சேர்க்கை உள்ளிட்டவை குற்றமாக கருதப்படுகிறது.மேற்கண்ட குற்றங்களில் ஈடுபடும் முஸ்லிம்கள் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பு அடி மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் முதன் முறையாக ஆக் மாகாணத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அத்தகைய தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டத்தை மீறியதாக ஜந்தோ நகரை சேர்ந்த ஆலம் பின் அகிம் (60) ஆகிய 2 பேர் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்பு அடி தண்டனை பெற்றனர்.
இதற்கு முன்பு முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இத்தண்டனை 2015-ம் ஆண்டு முதல் ஆக் மாகாணத்தில் வாழும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படுகிறது. இச்சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதே அதற்கு காரணமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply