பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படவேண்டுமாம்:ரணில் விக்ரமசிங்க
பயங்கரவாதத்துக்கு பாதுகாப்பு ரீதியாகவே பதிலளிக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“பாதுகாப்பு ரீதியாகவே பயங்கரவாதத்துக்குப் பதிலளிக்க வேண்டும். சில நேரம் இராணுவத்தினர் உள்ளனர், சில நேரம் பொலிஸார் உள்ளனர். எனினும், நீண்டகால சமாதானம் அரசியல் தீர்வின் மூலமே எட்டப்பட வேண்டும்” என ரணில் விக்ரமசிங்க கூறினார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணமுடியாது என நீண்டகாலமாகக் கூறிவந்த ரணில் விக்ரமசிங்க, தற்பொழுது பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற தொனிப்படக் கூறியுள்ளார்.
பயங்கரவாதம் இராணுவ ரீதியாக ஒழிக்கப்பட்டு, அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்வுகாணப்படும் என்பதையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூறிவருகிறார்.
இரு தலைவர்களும் தற்பொழுது ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், இந்த நிலைப்பாடானது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தென்னிலங்கையில் ஒருமித்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகத் தென்படுவதாகவும் ஆய்வாரள்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேநேரம், உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்யும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் பிரசாரங்களை முன்னெடுப்பதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
எனினும், இதனை மறுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர், பொய் பிரசாரங்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தரமுடியுமா என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.
“நான் உலகம் முழுவதும் சென்ற பொய்களைப் பரப்புவதில்லை. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளர் மற்றும் வர்த்தக ஆணையாளரை ஆகியோரைச் சந்தித்திருந்தேன். இந்தச் சந்திப்புக்களின் போது ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகள் பற்றியே கலந்துரையாடியிருந்தேன்” என அவர் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply