புதுடில்லி கருத்தரங்கில் ரணில், சம்பந்தன்
புதுடில்லியில் இன்று ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். என்.ஐ.ஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண் ேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு 2017 என்ற நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன. இந்த மாநாட்டில் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு இன்று ஆரம்பமாகி, எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் நாட்களில் பல்வேறு தொனிப்பொருள்களில் விவாதங்களும், கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளன. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 30 நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றன. பல்வேறு நாடுகளின் அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்பு நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply