ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் தேசிய ரூபவாஹினியில் விளம்பரம் செய்து அதற்காக 1652 லட்சம் ரூபாவை செலுத்தாமை சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் பாரிய ஊழல் மோசடி விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் விளம்பரம் செய்து அதற்கு நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்து அதற்கான அறிக்கையொன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் அறிக்கை, பின்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply