இஸ்ரேலில் நர்சை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி
இஸ்ரேல் தலைநகர் டெல்அவில் பகுதியில் உள்ள ஹோலோன் நகர சுகாதார மையத்தில் 70 வயது நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு தோவா கராரோ (56) என்ற நர்சு உதவியாளராக இருந்தார். நேற்று நோயாளிக்கு நர்சு தோவா கராரோ மருந்து மாத்திரை வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நோயாளி எரியும் தன்மை கொண்ட ஒரு திரவத்தை நர்சு தோவா கராரோ மீது வீசிவிட்டு காரில் தப்பி ஓடி விட்டார்.இதனால் நர்சு உடலில் தீப்பிடித்து எரிந்தது. வலியால் அவர் துடித்தார். உடனே தீயை அணைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே தப்பி ஓடிய நோயாளி கைது செய்யப்பட்டார். அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. சிகிச்சையில் திருப்தி இல்லாததால் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அவர் நர்சை எரித்துக் கொன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply