குஜராத்தில் துணிகரம்: ஓடும்காரில் தந்தை கண்முன் மகள்களை பலாத்காரம் செய்த கும்பல்
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள பட்பாக்லா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், அந்த கிராமத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 13 மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். இவரது மகன் மது வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது தனக்கு மது வழங்கியர் குமாத் பாரியா என்று போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் குமாத் பாரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் குமாத் பாரியா பழிக்குப்பழி வாங்க நினைத்தார். இதனால் கடை நடத்தி வந்தவரின் இரண்டு மகள்களையும் குமாத் பாரியா 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தினார். பின்னர் அந்த இளம்பெண்களின் தந்தையையும் கடத்தினார்கள்.
பின்னர் நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக செல்ல சொகுசு காரில் இருந்த கும்பல், தந்தை முன் அந்த இரண்டு இளம் பெண்களையும் பாலாத்காரம் செய்துள்ளனர். அப்போது போலீசார் என்னைக் காட்டிக் கொடுத்தற்கு உன் மகனை பழிவாங்குவதற்காகத்தான் உன் மகளை பலாத்காரம் செய்தோம் என்று குமாத் பாரியா கூறியுள்ளார்.
பின்னர் அவர்களை மாந்தவ் கிராமத்தில் இறக்கிவிட்டு, போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை புகார் அளிக்க 13 பேரில் குமாத் பாரியா உள்பட ஐந்துபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply