ஐதேகவில் குழப்பம் ஏற்படுத்த ஸ்ரீசுக முயற்சி
பிரச்சினைக்குரிய அமைச்சுக்களை சரிசெய்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்திவிட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முயற்சிப்பதாக தெரியவருகிறது.எப்படியாவது ஜனாதிபதியை பிடித்து அமைச்சரவை மாற்றம் ஒன்றை செய்து பிரச்சினையை ஏற்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பிக்கள் சிலர் ஜனாதிபதிக்கு பல யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
ரவி கருணாநாயக்கவை நிதி அமைச்சில் இருந்தும் மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சில் இருந்தும் லக்ஸ்மன் கிரியெல்லவை உயர்கல்வி அமைச்சில் இருந்தும் நீக்கவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களான இவர்களை அமைச்சில் இருந்து நீக்க கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னிலை உறுப்பினர்களை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி இரண்டாம் நிpலை எம்பிக்களை அமைச்சு பதவிக்கு நியமித்தால் நிச்சயம் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரின் நோக்கு.
எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியின் அண்மைய கருத்துக்கள் அவரை ஒரு குழு தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றமை தெளிவாக புலப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply