மீனவ பிரதிநிதிகளை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பார்: நிர்மலா சீதாராமன்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (வயது 22) என்ற மீனவர், கச்சத்தீவு அருகே கடந்த வாரம் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.மேலும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த சூழ்நிலையில், சென்னையில் இ.இ.பி.சி. இந்தியா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச பொறியியல் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு;-
தமிழக மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், பல மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வேதனை தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்க மீனவர்களின் பிரதிநிதிகள் விரும்பினர்.

உடல்நலம் சரியானதை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். தற்போது அவர் மீனவ பிரதிநிதிகளை சந்திக்க தயாராக இருக்கிறார். இந்த பிரச்சினையை சந்திக்க மத்திய அரசு எல்லா நிலைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக குறிப்பிட்ட காலகட்டத்தை நிர்ணயிக்க முடியுமா என்றால், இது மற்றொரு நாடு, அந்த நாட்டு மீனவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அவற்றையும் சேர்த்து பரிசீலனை செய்ய வேண்டும்.

மீனவர் பிரச்சினை என்றாலும், ஜல்லிக்கட்டு பிரச்சினை என்றாலும் மக்கள் பெருமளவில் உதவியை தேடுகின்றனர். மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை இது காட்டுகிறது. இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply