தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா ரெயில் நிலையம் அருகே குண்டு வெடிப்பு
உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ் மஹாலை வெடிகுண்டுகளால் தகர்க்கப் போவதாக தற்போது மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பெருமைக்குரிய சின்னமாக கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் வெந்நிற பளிங்குக் கல்லால் தீட்டப்பட்ட கவிதையான தாஜ் மஹால் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக பரவலாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக, உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நேற்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில போலீஸ் துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல், தாஜ் மஹால் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சில நம்பத் தகுந்த தகவல்கள் கசிந்துள்ளது.
இதையடுத்து, தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா நகரின் பிறபகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகர கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தின் அருகாமையில் இன்று அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply