திருடுபோன அமெரிக்க பாதுகாப்பு படையின் லேப்டாப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளின்டன் தொடர்பாக முக்கிய தகவல்களை கொண்ட அமெரிக்க உளவுப் பிரிவின் மடிக்கணினி (லேப்டாப்)திருடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.டிரம்ப் டவர் மற்றும் கிளின்டன் தனது சொந்த ஈமெயில் சர்வரை பயன்படுத்தியது தொடர்பாக புலனாய்வு செய்ததது தொடர்பான தகவல்கள் அந்த கணினியில் உள்ளதாக கூறப்படுகிறது.
வியாழனன்று நியூயார்க்கின் ப்ரூக்ளின் மாவட்டத்தில் ஒரு முகவரின் காரில் இருந்து அது எடுக்கப்பட்டது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
சிசிடிவி பதிவை கொண்டு திருடியவர்களை அடையாளம் காண காவல் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைப்பால் வழங்கப்பட்ட எல்லா கணினிகளும் பல அடுக்கு பாதுகாப்புகளை கொண்டதாக இருக்கும் என்றும் அவற்றில் ரகசிய தகவல்களை வைத்திருக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply