இலங்கைக்கு அவகாசம் அளிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது

தமிழர் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் அளிக்கும் வகையில் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

ஜெனிவாவில் இப்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க இலங்கை அரசு செய்யும் சதிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, மாசிடோனியா ஆகிய நாடுகள் சாதகமான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

இலங்கை அரசின் சம்மதத்தோடு தான் எந்தவொரு விசாரணையும் நடைபெற வேண்டும், விசாரணைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்து நிரந்தரமாகக் குற்றத்தை மூடிமறைக்க ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கு இந்தியா ஒருபோதும் ஆதரவு அளிக்கக் கூடாது. இதை வலியுறுத்தியும் இலங்கை அரசின் அராஜகப் போக்கை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply