அரசாங்கத்தில் பின்னர் வந்து சேர்ந்தவர்களே புதிய யாப்புக்கு எதிரானவர்கள் : ராஜித

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மாற்றத்தின் போது ஜனாதிபதியுடன் இருக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களே புதிய அரசியல் யாப்புக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதாகவும், ஜனாதிபதியும், ஜனாதிபதியுடன் தேர்தல் காலத்தில் இருந்தவர்களும் புதிய அரசியல் யாப்பைக் கொண்டுவரும் தீர்மானத்தில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தொடங்கொட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

நாம் தேர்தல் காலத்தில் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதாக மக்களுக்கு வாக்களித்தோம். ஜனாதிபதியும், ஐ.தே.கட்சியினரும், சிவில் அமைப்புக்களும் புதிய அரசியலமைப்பை நோக்கியே செயற்பட்டு வருகின்றனர்.

சர்வஜன வாக்கெடுப்புக்காக சகல தரப்பினரும் ஒன்றிணையவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஓரிருவர் எதிராக கருத்துத் தெரிவிப்பார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply