பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை; பிரான்ஸ் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் கைது.
பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், 52, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியென கிங்ஸ்ரன் கிரவுன் கோர்ட் இன்று (ஏப். 17) தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் அமைப்புக்கு உதவியதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் சுமத்தியிருந்தனர். இரண்டு குற்றங்களுக்காக இவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் மூன்றாவது குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்த வாரம் தீர்மானிக்குமென தெரிகிறது.
கனடாவில் புலிகளின் பினாமி அமைப்பாக இயங்கிய உலகத் தமிழர் முயக்கம் போல் ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிய பிரித்தானிய தமிழர் கழகத்தின் BTA (British Tamil Association ) தலைவரான சாந்தன் என்றழைக்கப்படும் ஏ. கிருஸ்சாந்தகுமார், மற்றும் அந்த அமைப்பின் நிதியாளர் கோல்டன் லம்பேர்ற் (இலங்கை தமிழர், வயது 30) என்கின்ற இருவரும் ஜூன், 2007இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி மத்திய லண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு பெடிங்டன் கிரீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.
கடந்த வருடம் ஏப்பிரலில் புலிகள் அமைப்புக்கு தற்கொலைத் தாக்குதல்களுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் பணம் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கையின் வடபகுதியை சேர்ந்த பிரித்தானியாவில் வேல்ஸ், நீயூரவுண் பகுதியில் வசித்து வந்த முரளிதரன் ஜெகதீஸ்வரன், 47, வித்தி தரன், 40, ஆகிய இருவரும், லண்டன் புறநகரான மிட்சம் பகுதியைச் சேர்ந்த முருகேசு ஜெகதீஸ்வரன், 33, என்பவருமாக மூன்று தமிழர்கள் பிரித்தானியாவின் ஸ்கொட்லண்ட் யார்ட் சர்வதேச பயங்கரவாத தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இத்தாலி பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரான்ஸ் பொலிசார் புலிகளின் முகியஸ்தர் குமரன் என்பவரை இன்று (ஏப். 17) கைது செய்துள்ளனர். இவரை மேலதிக விசாரணைக்காக் இத்தாலி பொலிசார் கையேற்க உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply