8 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட ருவாண்டா இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட போப்
சுமார் 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட ருவான்டா இனப்படுகொலைக்கு அப்போதைய கத்தோலிக்க சபை காரணமாக இருந்ததற்தாக போப் பிரான்சிஸ் தற்போது கடவுளிடம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். கடந்த 1994-ம் ஆண்டில் ருவாண்டா நாட்டில் டுட்சி இன மக்கள் மீது ஹூடு இனத்தவர்கள் தொடர்ந்து நடத்திய ஆயுதத் தாக்குதல் மூலம் இனப்படுகொலை செய்தபோது கிட்டத்தட்ட 8 லட்சம் டுட்சி இன மக்கள் மற்றும் இன்னும் சில சிறுபான்மை இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்நாட்டில் அப்போது இருந்த கத்தோலிக்க திருச்சபைகள் ஹூடு இனத்தவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், போப் பிரான்சிஸ், ‘சர்ச் மற்றும் அதன் நபர்கள் இழைத்த பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
ருவாண்டா நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்கவராக இருந்த நிலையில், இந்த இனப்படுகொலையில் கத்தோலிக்க சபைகள் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பெந்தயகோஸ் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply