சோமாலியாவில் பட்டினியால் 26 பேர் சாவு
வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளது. வறுமையும், வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன.அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை அந்த நாட்டின் அரசு வானொலி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் நாட்டின் 62 லட்சம் மக்கள் பட்டினியால் பரிதவிப்பதாகவும், அவர்களுக்கு உடனடியாக உணவுப்பொருட்கள் தேவைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. கடுமையான வறட்சியாலும், சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாலும், கால்நடைகள் செத்து வருவதாலும், மக்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக ஜூப்பாலேண்ட் பிராந்திய துணை மந்திரி முகமது உசேன் நேற்று தெரிவித்தார். அந்த நாட்டில் ஆறுகள் அனைத்தும் வறண்டு போய்விட்டன. கிணறுகளும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply