முதுகெலும்பிருந்தால் ஜெனீவா பிரேரணையை திருத்தம் செய்ய வேண்டும் : பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் 

முதுகெலும்புள்ள அரசாங்கம் என்றால் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவுள்ள யோசனையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். 2015ல் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோச னையில் சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஜீ. எல். பீரிஸ், அதன் ஆறாவது பிரிவை நீக்காவிட்டால் இம்முறையும் அதற்கு உடன்படுவதாகிவிடும் என்றும் அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

 

கூட்டு எதிர்க்கட்சியின் விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று (21) புஞ்சிபொரளையில் இடம்பெற்றது.

 

எம். பி. பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேரசிங்க, முன்னாள் அமைச்சர் திஸ்ஸவிதாரண உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில் தொடர்ந்தும் விளக்கமளித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்;

 

ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வுகள் இவ்வாரம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் மனித உரிமை ஆணையாளர் இன்றைய தினம் இலங்கை தொடர்பான யோசனை அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

 

எனினும் 2015ல் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாமலேயே இம்முறையும் அதனையே சமர்ப்பிக்க ஏற்பாடாகியுள்ளது.

 

முதுகெலும்புள்ள அரசாங்கம் என்றால் இந்த யோசனை அறிக்கையில் திருத்தம் செய்வது அவசியமாகும்.

 

இதனை வெறும் பரிந்துரை என மட்டும் அலட்சியமாகப் பார்க்க முடியாது.

 

இது சிபாரிசு அல்ல. இதனால் அது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமெடுத்து திருத்தங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென அவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply