பெல்ஜியம் செல்கிறார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதல் வெளிநாட்டுப் பயணமாக மே மாதம் பெல்ஜியம் செல்கிறார். அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் ஜன.,20ம் தேதி பதவியேற்றார். இதுவரை அவர் எந்த வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் மே மாதம் பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் நடைபெறும் ‘நேட்டோ’ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இது தான் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம். நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் இந்த தலைவர்களுடன், பயங்கரவாதம் குறித்து அதிபர் டிரம்ப் பேச்சு நடத்துவார் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply