இடம்பெயர் வோரைத் தங்கவைக்க மேலும் பல நிவாரணக் கிராமங்கள் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்க ஜனாதிபதி பணிப்பு

வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரும் சகல உட்கட்டமைப்பு வசதிகளுடனான நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படவுள் ளனர். இதற்கென மேலும் இரண்டு நிவாரணக் கிராமங்கள் உடனடியாக அமைக்கப்பட்டு வருவதாக மீள்குடி யேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.இடைத்தங்கல் முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும், வவுனியா காமினி மகாவித்தியாலயமும் எதிர்வரும் 21 ஆம் திகதி வவு னியா மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். அதில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து வரும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் வரை மூன்று மாதமோ அல்லது ஆறு மாதமோ அவர்கள் தங்கவைக்கப்படும் இடம் சகல அடிப்படை வசதிகளும் நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கு அமைய சுகாதாதரம், மின்சாரம், கல்வி, தொலைபேசி உட்பட அனைத்தும் வசதிகளும் நிறைந்த நிவாரணக் கிராமங்களிலேயே குடியமர்த்தப்படுகின்றனர்.

இதற்கமைய மேலும் நிவாரணக் கிராமங்கள் அமைக்கப் படவுள்ளன. வாரம்தோறும் கிராமங்களுக்குச் சென்று மக்களின் குறை நிறைகளை கண்டறியப்படுகிறது என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் ரிஷாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் 68, 273 பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். மேலும், சுமார் ஒரு இலட்சம் பேரை தங்கவைப்பதற்காக சகல வசதிகளுடனும் கூடிய நிவாரணக் கிராமங்கள் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மேலும், புதிய நிவாரணக் கிராமங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கான காணிகளை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது கதிர்காமர் நிவாரணக் கிராமம், அருணாசலம் நிவாரணக் கிராமம் ஆகியவை இயங்குகின்றன. செட்டிக்குளம பிரதேச செயலகப் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நில ப்பரப்பில் இராமநாதன் நிவாரணக் கிராமம், ஆனந்த குமாரசுவாமி ஆகிய இரண்டு நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.

குறிப்பாக, இடைத்தங்கல் முகாம்களாகவும், தற்காலிக முகாம்களாகவும் இயங்கும் பாடசாலைகள், அரசாங்க கட்டடங்கள் யாவும் கையளிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாகவே 21 ஆம் திகதி வவுனியாவில் இரண்டு பாடசாலைகளும் கையளிக்கப்படவுள்ளன.

வவுனியா மாவட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ளும் விதத்தில் முதற்கட்டமாக பாடசாலைகளிலுள்ளவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாத்துடன் அமைச்சர் அமீர் அலியும், அமைச்சின் செயலர் ஹால்தினும் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply