நாடு துண்டாடுவதை தடுத்து ஐக்கியப்படுத்தும் ஆணையையே மக்கள் எனக்கு வழங்கினர்
நாடு துண்டாடுவதைத் தடுத்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான ஆணையையே மக்கள் எனக்கு வழங்கினர். மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றும் முன்னிற்குமென ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தலின் போது உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண் டுமென்றோ அல்லது வேறு எந்த வேண்டு கோளையும் மக்கள் விடுக்கவில்லை. யாழ்ப்பாண மக்கள் கூடநாடு துண்டாடுவது தடுக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை மட்டுமே முன் வைத்தனர். நாட்டுத் தலை வன் என்ற ரிதியில் அதனை நான் நிறை வேற்றியுள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர் தல் வரலாற்றில் மிக முக்கியமானதொ ன்றாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் சரியானதா? அல்லது தவறானதா என்ற தீர்ப்பை மக்கள் இதன் மூலமே வழங்குவர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் கம் பஹா மாவட்ட செயற்பாட்டாளர்கள் மாநாடு நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற் றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, பண்டு பண்டார நாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே உட் பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-
கடந்த காலங்களில் நாம் நான்கு முக்கிய சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எனினும், எத்தகைய நிலையிலும் நாட்டின் அபிவிருத்தியையோ மக்களுக்கான நிவாரணங்களையோ நிறுத்தவில்லை. நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துவதிலும் முன்னின்றோம்.
சகல பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருவதுடன் நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் துறைமுக நிர்மாணம், மின் உற்பத்தித் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. ஒலுவில், காங்கேசன்துறை உட்பட ஒரே சமயத்தில் ஐந்து துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் புலிகள் படுகொலைகளைப் புரிந்த போதும் நாம் பேச்சுவார்த்தைகளிலேயே முனைப்பாக இருந்தோம். மாவிலாறு சம்பவம் வரை நாம் பொறுமை காத்தோம். அது விவசாயிகளின் நலன் சம்பந்தப்பட்டதால் நாம் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டது.
அன்று தொடங்கிய மனிதாபிமான நடவடிக்கை அதற்குப் பின் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இன்று அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இது தமிழ் மக்களையும் மீட்டு நாட்டையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம், இந்தப் போராட்டம் சரியா – தவறானதா என மக்களே தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்பிருந்த அரசியல் தலைவர்கள் கூட இந் நடவடிக்கையைத் தவறு எனவும் இது மனிதப் படுகொலைகளுக்கே வழிவகுக்கின்றன என்கின்றனர். சர்வதேச ரீதியிலும் இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய மக்களின் கருத்தை அறியவே மேல் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. சரி – பிழையை மக்கள் தெரிவிக்கட்டும். மேல் மாகாணத்திலும் அரசாங்கம் வெற்றி பெறும். மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்கும் கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.
மேல் மாகாணம் உட்பட மாகாண சபைகள் அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் தான் அபிவிருத்திப் பணிகளை முறையாக முன்னெடுக்க முடியும். மக்களுக்கு அதிக சேவைகளை வழங்கவும் முடியும். கம்பஹா மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் 1,26,000 வாக்குகள் பெற்றோம். இம்முறை மூன்று இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூட வேண்டும். கம்பஹா மாவட்டம் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் சிறந்த அபிவிருத்தி கண்டுள்ள மாவட்டம். மின்சாரமில்லாத கிராமங்களே அங்கு இல்லை. வேலை வாய்ப்பற்றோர் வீதமும் மிகக் குறைவாகவே அங்குள்ளது. வரலாற்றில் சகல சந்தர்ப்பங்களிலும் கம்பஹா மாவட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே பின்னிப் பிணைந்துள்ளது. கட்சி கட்டியெழுப்பப்பட்டதும் இங்கு தான். இங்கிருந்தே பெரும் தலைவர்கள் உருவானார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply