தேர்தலைக் காரணம் காட்டி இழுத்தடிக்கக் கூடாது: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி.தினகரனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஆர்.கே.நகர் தேர்தலைக் காரணம் காட்டி வழக்கு விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது என டிடிவி.தினகரனை எச்சரித்துள்ள எழும்பூர் நீதிமன்றம், விசாரணையை வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடு கிறார். இவர் மீது ஏற்கனவே அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்குகள் மீதான விசா ரணை நீதிபதி மலர்மதி முன்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே டிடிவி.தினகரன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால் இந்த வழக்கு விசாரணையை தேர்தல் முடியும்வரை தள்ளி வைக்க வேண் டும் என டிடிவி.தினகரன் தரப்பு விடுத்த கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

அதேபோல் மத்திய அமலாக்கத் துறை, ‘டிடிவி.தினகரன் மீதான இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தலுக்கும், இந்த வழக்குகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கு விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடிக்கும் நோக்கத்தில் டிடிவி.தினகரன் தரப்பு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை தினம்தோறும் என்ற அடிப்படையில் வேகமாக நடத்தி முடிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அமலாக்கத்துறை விடுத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்றுள்ள நீதிமன்றம் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று காலை நீதிபதி மலர்மதி முன்பாக நடந்தது. அப் போது டிடிவி.தினகரனும் ஆஜராக வில்லை. அவரது தரப்பில் வழக் கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, இன்று (நேற்று) மாலைக்குள் வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று மாலை டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘‘இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகியுள் ளோம். அந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு வர வுள்ளது. எனவே வழக்கு விசார ணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்’’ என கோரினார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘ஏற் கெனவே இந்த வழக்கு தினம் தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டினைப் பதிவு செய் வதற்கே இத்தனை நாட்களாக காலதாமதமாகியுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலைக் காரணம் காட்டி வழக்கை இழுத்தடிக்கக் கூடாது. தற்போது உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறியுள்ளதால் வழக்கை வரும் ஏப்.10-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்’’ என உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply