தினகரனுக்காக நாளை முதல் பிரச்சாரம் செய்வேன் : சரத்குமார்
ஆர்.கே.நகரில் போட்டியிடும் டிடிவி.தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேரில் ஆதரவு தெரிவித்தார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ‘’ஆர்.கே.நகரில் நாளை முதல் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன். சமக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தினகரனுக்கு ஆதரவினை தெரிவித்துள்ளேன்.
தற்போதைய அதிமுக அரசு தொடர வேண்டும் என்பதற்காகவே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காகவே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன்.
அதிமுக இரண்டு அணியாக பிரிந்து நிற்பதால் இடையில் புகுந்து வந்துவிடலாம் என்று நினைக்கிறது திமுக. அது ஒருபோதும் நடக்காது. பிரிந்து நிற்கும் அதிமுகவின் விரைவில் இணைந்துவிடும்’’ என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply