மைத்திரிபாலதான் நாட்டின் ஜனாதிபதி என்பதை அவருக்கு நினைவுபடுத்துவோம் : டிலான்

கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர், இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை உணர்த்திச் சொல்லி நினைவுட்டவுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் பிரதமர் என்பது தெரியாதுள்ளார். அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவும் அவர் ஜனாதிபதி என நினைத்துக் கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் தற்போதைய ஜனாதிபதியாகவே தன்னை நினைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோன்று, மைத்திரிபால சிறிசேன தன்னை இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்துள்ளார். அவருக்கு இந்த மே தினக் கூட்ட ஊர்வலத்தின் போது, அவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவுபடுத்தவுள்ளோம். யார் எதைச் சொன்னாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply