ஈராக் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்
ஈராக் நாட்டில் டைக்ரிஸ் நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள முக்கிய பெருநகரமான மோசூலில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்நகரை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ். இயக்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக அறிவித்தனர்.
ஈராக்கில் உள்ள மோசூல் நகரை மீட்க ஈராக் ராணுவம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், மோசூல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈராக் ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு சிப்பந்திகளும் இதில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மோசூல் பகுதியின் தரைப்பகுதியில் இருந்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஏபி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகப்பெரிய தீப்பிழம்பு ஒன்று வெடித்துச்சிதறிய பிறகு கரும்புகை வெளியேறும் காட்சிகளும் தெரிகின்றன. கிழக்கு மோசூல் பகுதியில் ஹெலிகாப்டரின் பாகங்கள் விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply