அம்பாறை இறக்காமத்தில் உணவு விசமாகியதால் நால்வர் உயிரிழப்பு
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு விசமாகியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காகாக அதிகரித்துள்ளது.மூன்று பெண்களும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக இறக்காமம் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் ரசீல் குறிப்பிட்டுள்ளார்.உணவு விசமடைந்ததன் காரணமாக சுமார் 600 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் கர்பிணி தாய்மார்கள் அம்பாறை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவதாகவும் இறக்காமம் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் ரசீல் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply