பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 போலீசார் உள்பட 15 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜமாத்-உல்-அஹ்ரார் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த கோர தாக்குதலில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், சி.சிடி.வி கேமரா மூலம் அவ்வமைப்பின் முக்கிய நபரான அன்வருல் ஹக்கை கைது செய்து அவர் மூலமாக மற்ற தீவிரவாதிகளை நெருங்கினர்.

இந்நிலையில், லாகூர் அருகே உள்ள மனாவன் என்ற இடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை இன்று காலை சுற்றி வளைத்த போலீசார், அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்களை தொடுத்தனர். பதிலுக்கு தீவிரவாதிகளும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் தாக்கினர். போலீசாரின் இந்த அதிரடி என்கவுண்டரில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

கடந்த வாரம் பஞ்சாப் மாநில தலைநகரான லாகூருக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் நான்கு பேர் உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 15 பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply