அகதிகள் இல்லாத வடமாகாணம் : சீ.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது செயலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் அகதிகள் இல்லாத நிலை ஏற்படுகின்றதா என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அவதானிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வருகை தரும் இலங்கை அகதிகளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அலுவலகமும் முன்வர வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருகின்றதாக ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் தெரிவித்ததாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply