பொலிஸார் கேட்காமலேயே இலஞ்சம் கொடுக்கிறார்கள் யாழ்ப்பாணச் சாரதிகள் – மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு

யாழ்ப்­பா­ணத்­தில் சில பொலி­ஸார் இலஞ்­சப் பணத்­தைக் கேட்­ப­தற்கு முன்­னரே சார­தி­கள் தாமாக முன்­வந்து இலஞ்­சம் கொடுக்க முயல்­கி­றார்­கள். ஆயி­னும் பொலி­ஸார் இலஞ்­சம் வாங்­கும் செய­லில் ஈடு­ப­டக்­கூ­டாது என யாழ்ப்­பாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஸ்ரனிஸ்­லஸ் தெரி­வித்­தார்.

போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸா­ரி­னால் விதிக்­கப்­ப­டும் தண்­டப் பணத்­தின் வெகு­ம­தித் தொகையை வழங்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணப் பொலிஸ் நிலை­யக் கேட்­போர் கூ­டத்­தில் நேற்று நடை­பெற்­றது.இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்­பா­ணத்­தைப் பொறுத்­த­வரை இங்­குள்ள சார­தி­களை நான் நன்கு அறி­வேன். சட்ட மீற­லுக்­கா­கத் தண்­டப் பணத்தை அற­விட முற்­ப­டும்­வே­ளை­யில் பொலிஸார் கேட்­கா­மலேயே சார­தி­கள் பணத்தை இலஞ்­ச­மா­கக் கொடுக்­கும் நிலமை காணப்­ப­டு­கின்­றது. பொலி­ஸார் இலஞ்­சம் என்ற விட­யத்­துக்­குள் போகக்­கூ­டாது. இலஞ்­சம் மூலம் பணம் சம்­பா­திப்­பீர்­க­ளா­யின் உங்­கள் குடும்­பத்தை இழக்க நேரி­டும்.
உங்­கள் வாழ்க்­கையை இழந்­து-­சந்­தோ­சங்­களை இழந்து சிறைக்குச் செல்ல நேரி­டும்.

இலஞ்­சம் வாங்­கிப் பெரிய வீடு­கள் கட்­டிய சில உத்­தி­யோ­கத்­தர்­களை நான் அவ­தா­னித்­துப் பார்த்­தி­ருக்­கின்­றேன். அவர்­கள் தங்­க­ளின் வீடு­கள், குடும்­பங்­கள் எல்­லா வற்­றையும் இழந்து பத­வி­யை­யும் இழந்து இருக்­கின்­ற­மை­யைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. எனவே உங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் மாதாந்­தச் சம்­ப­ளப் பணத்­து­டன் உங்­கள் குடும்ப வாழ்க்­கையை நடத்­துங்­கள். அவ்­வாறு செய்­வீர்­கள் ஆயின் உங்­கள் வாழ்க்கை சந்­தோ­ச­மான வாழ்க்­கை­யாக அமை­யும்.

போக்­கு­வ­ரத்து விதி மீறல்­கள் இடம்­பெ­றும்­போது அந்த இடத்­தி­லேயே தண்­டப் பணத்தை அற­வி­டுங்­கள். அதனை விடுத்­துப் பொலிஸ் நிலை­யம் அழைத்­துச் செல்­லா­தீர்­கள். அப்­படி அழைத்­துச் செல்­லும்­போது அங்கு இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு வந்து நீங்­கள் இலஞ்­சம் வாங்­கி­யதை உறு­திப்­ப­டுத்­திப் பிடித்­தால் அதன் பின்­னர் சிறை­யில் தான் இருக்­க­வேண்டி வரும். அவ்­வாறு நடந்­தால், எங்­களைப் போன்ற உயர் அதி­கா­ரி­க­ளுக்­கும் தான் இழுக்கு ஏற்­ப­டும்.எனவே இவற்றை எல்­லாம் உணர்ந்து செயற்­ப­டுங்­கள் – என்­றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply