சோமாலியாவில் கார்குண்டு தாக்குதலில் உயிர் தப்பிய புதிய ராணுவ தளபதி: 13 பேர் பலி
சோமாலியாவில் அரசுப் படைகளுக்கு எதிராக அல் சகாப் தீவிரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். ராணுவத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்கள், வெடிகுண்டு தாக்குதல்களும் தொடர்ந்து நடத்தி வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது.இதனையடுத்து சோமாலியாவை போர்ப் பகுதியாக பிரகடனம் செய்த ஜனாதிபதி முகமது அப்துல்லாகி முகமது, ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவு தலைவர்களை மாற்றினார். ராணுவத்தின் புதிய தளபதியாக ஜெனரல் முகமது அகமது ஜிமாலி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள முகமது அகமது ஜிமாலி, இன்று மூத்த ராணுவ அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து வெளியே சென்றார். அவருடன் பாதுகாப்பு படை வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது பாதுகாப்பு அமைச்சக காம்பவுண்டு அருகே கார் குண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
இதனால், அவ்வழியே சென்ற வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. இதில், மினி பஸ்சில் சென்றுகொண்டிருந்த 5 வீரர்கள், 8 பொதுமக்கள் என மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல் சகாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அல் சகாப் தீவிரவாதிகளை சரண் அடைந்து அரசுப் படையில் சேருவதற்காக ஜனாதிபதி 60 நாட்கள் பொதுமன்னிப்பு காலம் வழங்கியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply