நாமலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல்
நாமல் ராஜபக்ஷ உட்பட ஐவருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.30 லட்சம் ரூபா நிதியை சேவைக் கட்டணமாக வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பலரும் பல்வேறு ஊழல் மோசடி தொடர்பில் கைது செய்யப்படுகின்றனர். இதுவரையில் எவரிடமிருந்தும் மோசடிகள் நிரூபிக்கப்படவும் இல்லை. அவர்கள் செய்ததாக கூறப்படும் பொது நிதி மோசடிகள் மூலம் நாடு நன்மையடையவுமில்லை.
இவர்களுக்கான விசாரணைக்கென அரச சொத்துக்களும், வளங்களும், அரச அதிகாரிகளின் மனித மணித்தியாலங்களும் விரயமாவதாகவே மக்கள் உணர்கின்றனர். கூட்டு எதிர்க் கட்சியினர் இதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுவது உண்மை போன்றும் பொது மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
உண்மையில் கைது செய்யப்படும் அரசியல் வாதிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லையென்றால், இந்த அரசாங்கம் விசாரணை எனும் பெயரில், பொது மக்கள் சொத்துக்களை அரசியல் பழிவாங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கின்றது என யாராவது கூறினால் அது மிகையாகாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply