20 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும்

வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படாவிட்டால் 15 ஆயிரம் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தியும் தமது பிரச்சினைகளை ஜனாதிபதி கவனத்தில்கொ ள்ளாவிட்டால், நாடு முழுவதும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலால் முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிக்கும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி நேற்று 15 ஆவது நாளாகத் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் மக்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதாகக் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மக்களுக்கு சட்டப்பூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசாங்கம் கையேற்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவு படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply