ஜப்பான் சென்றுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இன்று
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜப்பானின் நரித்தா சர்வதேச விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தனர்.
ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் ஹிரோதோ இசுமி (Hiroto Izumi) ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்காநாத் திசாநாயக்க ஆகியோரால் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் வரவேற்கப்பட்டனர்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பில் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர், அந்நாட்டில் இடம்பெற உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஜிங் ஷோ அபேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன், ஜப்பானிலுள்ள உயர்மட்ட அரசத் தலைவர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.
அத்துடன் ஜப்பானின் முன்னாள் பிரதமரையும் சந்திக்க உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முதலீட்டாளர்கள் மற்றும் மேலும் சில அமைப்புக்களுடனும் சந்திப்பு நடத்த உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply